தேசியம்
செய்திகள்

கனடாவிடம் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளன: இராணுவத் தளபதி Brodie

கனடாவிடம் தேவைக்கு அதிகமான COVID தடுப்பூசிகள் தற்போது உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா முழுவதும் தடுப்பூசிகளின் விநியோகத்தை மேற்பார்வையிடும் இராணுவத் தளபதி Brigadier General Krista Brodie இந்தத் தகவலை வெளியிட்டார். இதனால் தடுப்பூசி விநியோகத்தில் கனடா மிகவும் நுணுக்கமான அணுகுமுறைக்கு நகர்கிறது என அவர் தெரிவித்தார்.

கனடாவின் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேவையை விட அதிகமாக உள்ளதாக கூறிய Brodie,
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தார். இவற்றைப் பயன்படுத்த முடியாது என மாகாணங்கள் மத்திய அரசாங்கத்திடம் கூறியுள்ளதாகவும் Brodie கூறினார்.

இந்த தடுப்பூசிகள் எப்போது காலாவதியாகும் என்ற ஊடகங்களின் கேள்விக்கு Health கனடா பதிலளிக்கவில்லை.

எதிர்வரும் வாரங்களில், 66 மில்லியன் தடுப்பூசிகளின் விநியோகத்தை கனடா கடக்கும் என கூறிய அவர், இதன் மூலம் தகுதியுள்ள ஒவ்வொரு கனேடியருக்கு தடுப்பூசி வழங்க கனடாவினால் முடியும் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே 17.7 மில்லியன் Astrazeneca தடுப்பூசிகளை கனடா உலகளாவிய COVAX தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது.

வியாழக்கிழமை 69 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் தமது முதலாவது தடுப்பூசியையும், 47 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Related posts

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Quebec பெண்ணுக்கு இரத்த உறைவு!

Gaya Raja

80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளது: தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!