தேசியம்
செய்திகள்

கனேடிய பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைவர் மீது குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது!

கனேடிய பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைவர் ஜெனரல் Jonathan Vance மீது குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக கனேடிய ஆயுதப்படைகளும் தேசிய பாதுகாப்புத் துறையும் அறிக்கையை வெளியிட்டன. நீதிக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுடன் தனது கடந்த கால உறவு குறித்து தவறான தகவல்களை வெளியிட தூண்டியதாக Vance மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த February மாதம் 4ம் திகதி Vance மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவ காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர். இந்த விசாரணையின் போது நீதிக்கு இடையூறு விளைவித்ததாக இப்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

AstraZenecaவை தொடர்ந்து mRNA தடுப்பூசியை இரண்டாவதாக பெறலாம் – NACIயின் புதிய பரிந்துரை

Gaya Raja

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!