February 16, 2025
தேசியம்
செய்திகள்

அரசாங்கத்தின் மருந்தகச் சட்ட வரைவை NDP நிராகரிப்பு!

Liberal அரசாங்கத்தின் மருந்தக சட்ட (pharma care) திட்ட வரைவை NDP நிராகரித்துள்ளது.

அரசாங்கத்தின் முதல் pharma care வரைவை புதிய ஜனநாயகக் கட்சியினர் நிராகரித்துள்ளனர்.

NDP உடன் அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த இலையுதிர் காலத்தில் மருந்தக சட்டத்தை முன்வைப்பதாக Liberal கட்சி உறுதியளித்தது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமாக தொடர்வதாக சுகாதார அமைச்சர் Mark Holland விவரித்தார்.

ஆனால் இந்த மருந்தக சட்டத்தின் முதல் வரைவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என NDP சுகாதார விமர்சகர் Don Davies கூறுகிறார்.

இந்த நிலையில் அடுத்த சட்ட வரைவு எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts

அமைச்சர்களுக்கான ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்

Lankathas Pathmanathan

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

thesiyam

Leave a Comment