தேசியம்
செய்திகள்

Scarboroughவில் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்!

Scarboroughவில் நிகழ்ந்த வன்முறை கொள்ளை, கடத்தல் தொடர்பாக இரண்டு தமிழர்கள் Toronto காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வர்த்தக கொள்ளை மற்றும் கடத்தல் தொடர்பாக இருவரைக் கண்டுபிடிப்பதற்கு Toronto காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர் . 42 வயதான Markham நகரை சேர்ந்த ராம்நாகராஜ் ராஜரத்தினம், 38 வயதான Torontoவை சேர்ந்த கோகுலநாதன் ஐயாத்துரை ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

January மாதம் 30ஆம் திகதி Toronto காவல்துறையினர் Markham and McNicoll சந்திப்பு பகுதிக்கு அழைக்கப்பட்டனர். ஒரு கடை ஊழியரை அணுகிய மூவர், அவரிடன் உதவியைக் கோரியதாக தெரியவருகின்றது. பின்னர் மூவரும் ஒரு வாகனத்தில் கடை ஊழியரை கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்டவரின் கண்களை மூடி, கைகளையும் கால்களையும் கடத்தல்காரர்கள் கட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடத்தப்பட்டவரிடம் பணம் கோரிய கடத்தல்காரர்கள் அவரை தாக்கியதாகவும், காவல்துறையினர் கூறுகின்றனர்.

கடத்தப்பட்டவரிடமிருந்து நகைகளை பறித்தெடுத்த கடத்தல்காரர்கள் அவரை Sandhurst Circle and McCowan சந்திப்பு பகுதியில் விட்டுச் சென்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடர்ந்து, Toronto காவல்துறையின் கடத்தல் விசாரணை பிரிவு இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது

இவர்கள் இருவர் மீதும் ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இருவருமே ஆபத்தானவர்களாகக் கருதப்படுகின்றனர். இருவரையும் அணுக வேண்டாம் என கோரியுள்ள Toronto காவல்துறையினர் அவர்களை கண்டால் 9-1-1 ஐ அழைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

எதிர்வரும் புதன்கிழமை இரண்டாம் படிக்கு நகரும் Ontario!

Gaya Raja

சீன பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை

Lankathas Pathmanathan

பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைக்கும் Conservative தலைவருக்கு கண்டனம்!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!