கனேடிய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக வைத்திருக்கிறது.
2021ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பையும் வங்கி குறைக்கிறது. முன்னர் எதிர்பார்த்ததை விட இந்த ஆண்டு உள்நாட்டு பொருளாதாரம் சற்று மெதுவான வேகத்தில் வளரும் எனவும் COVID தொற்றில் இருந்து ஏற்படும் அபாயங்கள் குறையும் எனவும் கனேடிய வங்கி எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் போக்கு நிர்ணயிக்கும் கொள்கை வீதத்தை மாற்ற போதுமானதாக இல்லை எனவும் கனேடிய வங்கி தெரிவித்தது.
2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 6.0 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது அதன் முந்தைய கணிப்பான 6.5 சதவீதத்தில் இருந்து குறைந்ததாகும்.
இருப்பினும், மத்திய வங்கி இப்போது 2022 ஆம் ஆண்டில் 4.6 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. இதன் முந்தைய கணிப்பு 3.7 சதவீதமாக இருந்தது.
தொற்று கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் தடைப்பட்டதால், எதிர்பார்த்ததை விட ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி பலவீனமாக உள்ளது. நாடு முழுவதும் பொது சுகாதார கட்டுப்பாடுகள் ஓரளவு அல்லது முழுவதும் நீக்கப்பட்ட நிலையில், நுகர்வோர் அதிக செலவு செய்ய ஆரம்பிப்பார்கள் என மத்திய வங்கி இப்போது எதிர்பார்க்கிறது.