தேசியம்
செய்திகள்

கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்: பிரதமர் Trudeau

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (28) அறிவித்தார்.

உக்ரைனுக்கான கனடாவின் உதவி முயற்சிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது Trudeau இதனை கூறினார்.
இது கனடா ஏற்கனவே அறிவித்த, வழங்கிய உதவிகளை விட கூடுதலானது என அறிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தில் கனடா எடுத்த  தடைகள், பிற நடவடிக்கைகளையும் Trudeau  விளக்கினார்.

ரஷ்யாவின்  கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்யப்படும் எனவும் Trudeau  அறிவித்தார்
இந்த செய்தியாளர் சந்திப்பில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், குடிவரவு, அகதிகள் குடியுரிமை அமைச்சர் Sean Fraser ஆகியோரும் பங்கேற்றனர்.

Related posts

Markham நகர விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணம்

Lankathas Pathmanathan

ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரில் Markham நகரில் உள்ள ஒரு தெரு

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment