September 19, 2024
தேசியம்
செய்திகள்

Kamloops வதிவிடப் பாடசாலை புதைகுழிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகாது!!

British Colombia மாகாணத்தின் Kamloops வதிவிடப் பாடசாலையில் அமைந்துள்ள புதைகுழிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகாது என தெரியவருகின்றது.

முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில் நில குறிப்பற்ற புதைகுழிகளின் மொத்த எண்ணிக்கை அறியப்படுவதற்கு முன்னர் 65 hectares நிலப்பரப்பு கணக்கிடப்பட உள்ளதாக தெரியவருகின்றது. கனடாவின் மிகப்பெரிய வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த  இடத்தில் நில குறிப்பற்ற கல்லறைகளின் மொத்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர், மேலும் 65 hectares நிலப்பரப்பு கணக்கிடப்பட  உள்ளதாக தரையில் ஊடுருவும் radar நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த பகுதியைத் தேடியதில் 200 கல்லறைகள் என நம்பப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த முன்னாள் வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் 215 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

கொத்துக் குண்டுகளின் பயன்பாட்டை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

கனடாவில் முதற்குடியின ஆளுநர் நாயகம் வாசித்த முதலாவது சிம்மாசன உரை

Lankathas Pathmanathan

Leave a Comment