தேசியம்
செய்திகள்

எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விபரங்கள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் LeBlanc

எதிர்வரும் நாட்களில் எல்லை கட்டுப்பாடுகள் குறித்த புதிய விவரங்களை கனேடிய மத்திய அரசாங்கம் வெளியிடவுள்ளது.

அரசுகளுக்கிடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc இந்த அறிவித்தலை வெளியிட்டார். வரவிருக்கும் நாட்களில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடிய மத்திய அரசு மேலதிக விவரங்களை வெளியிடும் என அமைச்சர் LeBlanc கூறினார்.

வியாழன் இரவு பிரதமர் Justin Trudeauவின் முதல்வர்களுடனான உரையாடலில் இது ஒரு விவாதப் பொருளாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.COVID தொற்று குறித்த கவலைகள் நீடிக்கும் நிலையில் இந்த விடயம் எச்சரிக்கையுடன் அணுகப்படும் எனவும் LeBlanc கூறினார்.

அதேவேளை எப்போது கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பதை தீர்மானிப்பதில் கனேடியர்களின் தடுப்பூசி பெறும் விகிதம் ஒரு முக்கிய அளவீடாகும் என துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர்
Howard Njoo கூறினார்.

கனேடிய எல்லை ஒரு சில விதி விலக்குகளுடன் வெளிநாட்டினருக்கு குறைந்தது எதிர்வரும் 21ஆம் திகதி  வரை மூடப்பட்டுள்ளது. சில பயணத் தடைகள் கடந்த 5 ஆம் திகதி கனடாவில் நீக்கப்பட்டன. குறிப்பாக முழுமையாக தடுப்பூசி பெற்ற கனேடியர்கள் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை கைவிட அரசாங்கம் அனுமதித்துள்ளது.

Related posts

COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,536

Kamloops வதிவிடப் பாடசாலை புதைகுழிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகாது!!

Gaya Raja

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!