தேசியம்
செய்திகள்

Markham நகரில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்

Markham நகரில் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது வெள்ளிக்கிழமை (25) காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் ஒருவர் மரணமடைந்ததாக Ontario சிறப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாக Markham நகரில் நிகழ்ந்த ஆறு வீட்டு கொள்ளை சம்பவங்கள் குறித்து York பிராந்திய காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்த வேளையில் வெள்ளிக்கிழமை காலை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பலியானவரின் வயது உட்பட்ட விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆனாலும் காயமடைந்தவர் 26 வயதான ஆண் என கூறும் காவல்துறையினர் அவர் உயிர் ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை வெள்ளை வாகனத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக நால்வரை அடையாளம் கண்டுள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

26 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan

பின்லாந்து, ஸ்வீடன் NATOவில் இணைவதற்கு முதல் நாடாக கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment