தேசியம்
செய்திகள்

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை செய்யப்படவுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கான தடை விரைவில் வரக்கூடும் என வியாழக்கிழமை (24) Brampton நகரம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த நகர சபை கூட்டத்தில் இந்த தடை அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசுகளின் தடை கோரும் Brampton நகர வாசியின் மனு 9,000 கையெழுத்துக்களை வெள்ளிக்கிழமை (25) வரை பெற்றுள்ளது.

பட்டாசுகள் எந்த நாட்கள் மற்றும் நேரங்களில் வெடிக்கலாம் என்பதை நிர்ணயிக்க அல்லது அவற்றை முற்றிலும் தடை செய்ய இந்த மனு கோருகிறது.

கடந்த புதன்கிழமை (23) நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் பட்டாசு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒருமனதாக வாக்களிக்கப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை (28) Brampton நகரசபை இந்த தீர்மானத்தை அங்கீகரிக்கவுள்ளது.

இதன் மூலம் எந்த நேரத்திலும் நகரத்தில் பட்டாசு வெடிப்பது அல்லது விற்பனை செய்வது உடனடியாக சட்டவிரோதமாக உள்ளது.

Related posts

கனடாவில் COVID தொடர்பான இறப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டும்: கனடிய அரசாங்கத்திடம் அழைப்பு

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

Leave a Comment