தேசியம்
செய்திகள்

Waterloo விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்

Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடு பாதையை கடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்தது.

Flair Airlines விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (25) காலை ஓடுபாதையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

Vancouver நகரில் இருந்து Kitchener-Waterloo பயணமான இந்த விமானம் காலை 6:30 அளவில் தரையிறங்கியதும் ஓடுபாதையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 134 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்தனர் என Flair விமான நிறுவனம் தெரிவித்தது.

இதில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் கூறுகிறது.

TSB எனப்படும் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் Waterloo சர்வதேச விமான நிலையம் வணிகப் போக்குவரத்திற்காக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

இந்த நிலையில் விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது தெரியவரவில்லை.

Related posts

முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த சில கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தலுக்கு $570 மில்லியன் செலவாகும்?

Lankathas Pathmanathan

ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட இணக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment