September 27, 2026
தேசியம்
செய்திகள்

Conservative அதிகார சபை அங்கத்தவர் கட்சியை விட்டு வெளியேறினார்

Conservative குழுவில் (caucus) இருந்து ஏற்கனவே வெளியேறிய Quebec அதிகார சபை அங்கத்தவர் (senator) தற்போது கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

கட்சியின் புதிய தலைவராக Pierre Poilievre வெற்றி பெற்ற நிலையில் senator Jean-Guy Dagenais இந்த முடிவை எடுத்துள்ளார்

சமீபத்திய தலைமைப் போட்டியில் முன்னாள் Quebec முதல்வர் Jean Charestடை அவர் ஆதரித்திருந்தார்.

புதிய தலைவராக Poilievre இன் முதல் வாரம், கட்சியில் இருந்து விலகுவதற்கான முடிவுக்கு தன்னை தள்ளியுள்ளதாக அவர் கூறினார்

Conservative கட்சியில் இருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Alain Rayes இந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Bramptonனில் தமிழர் சமூகத்துக்கு நினைவுச் சின்னம் – தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment