தேசியம்
செய்திகள்

மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை எதிர்கொள்ளும் கனடிய அரசாங்கம்!

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை கனடாவின் ஆளும் Liberal அரசாங்கம் எதிர்கொள்ளவுள்ளது.

சிறுபான்மை Liberal  அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் இந்த மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புகள் அமையவுள்ளன. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மீதான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை வாக்குகளாக கருதப்படும். இந்த வாக்கெடுப்புகளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை வாக்குகளாக கருதுமாறு எதிர்க்கட்சிகளை  Liberal அரசாங்கம் கோரியுள்ளது. 


அதேவேளை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான பிரதான வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த வாக்களிப்புகளில் வெற்றி பெறுவதற்கு பிரதமர் Justin Trudeauவின் Liberal அரசாங்கத்திற்கு  குறைந்தது ஒரு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவை. தொற்றுக்கு மத்தியில் கனடியர்கள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதை  புதிய ஜனநாயக கட்சி விரும்பவில்லை என கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் தமிழறிஞர் G.U. Pope நினைவுச் சிலை

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – June 01, 2022 (புதன்)

Leave a Comment