உட்கட்சிப் பூசல் மத்தியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre வெளியேறினார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பதற்காக British Columbia-வில் Conservative கட்சி நாடாளுமன்றக் குழு திரண்டிருந்த மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (17) நிறைவடைந்தது.
கட்சியின் நாடாளுமன்றக் குழு தங்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்துள்ள வேளையில், கட்சியின் எதிர்கால வழிகாட்டுதல், உட்கட்சிப் பிளவுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் Pierre Poilievre வெளியேறினார்.
Conservative கட்சியின் நாடாளுமன்றக் குழு முற்றிலும் உடைந்து சிதறிய ஒரு குழப்பமாக மாறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்லாமல் அங்கிருந்து Pierre Poilievre வெளியேறினார்.
