தேசியம்
செய்திகள்

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் மத்திய அரசாங்கத்தின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன.

கனடிய மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை இந்த முடிவை அறிவித்தது.

அடுத்த வாரம் முதற்குடி படைவீரர் தினம் மற்றும் நினைவு தினத்திற்காக மத்திய அரசாங்க கட்டிடங்கள் மற்றும் அமைதி கோபுரத்தின் மீது கனடிய கொடிகளை உயர்த்தி மீண்டும் அரைக் கம்பத்தில் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன் பின்னர் கொடிகள் முழு கம்பத்திற்கு திரும்புவுள்ளன.

Kamloops, British Colombiaவில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் முதன் முறையாக பெயர் குறிக்கப்படாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து May மாத இறுதியில் கனடிய கொடிகள் அரைக் கம்பத்திற்கு தாழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

35 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை booster தடுப்பூசியை பெற்றுள்ளனர்: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Toronto கல்விச் சபை பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

Gaya Raja

2023 வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும்?

Lankathas Pathmanathan

Leave a Comment