தேசியம்
செய்திகள்

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார் .

கனடிய அமெரிக்க எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த கருத்தை தெரிவித்தார்.

கனேடிய எல்லையில் COVID தொற்றுக்குக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.

குறிப்பாக குறுகிய பயணங்களுக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு  PCR சோதனைத் தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என Tam தெரிவித்தார்.

கனேடிய எல்லை சேவைகள் நிறுவனம் கனடாவிற்குள் நுழையும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான சோதனைத் தேவைகளை மீண்டும் வலியுறுத்தியது.

அமெரிக்காவுடனான எல்லை அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமான புதிய இலக்கு வைக்கப்பட்ட தொற்று உதவி

Lankathas Pathmanathan

சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது?

Lankathas Pathmanathan

கனேடிய வங்கிகள் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்கு திறந்திருக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment