தேசியம்
செய்திகள்

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

தெற்கு Ontarioவின் சில பகுதிகளிலும், Nova Scotia , Quebec மாகாணங்களின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.

தெற்கு Ontarioவில் 20 முதல் 30 சென்டி மீட்டர் பனிப்பொழிவு சனிக்கிழமை மாலைக்குள் பதிவாகியுள்ளது.

குறிப்பாக Nova Scotia இந்த பனி புயலின் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டது.

தலைநகர் Halifaxசில் வெள்ளியன்று (03) 23 முதல் 31 சென்டி மீட்டர் பனிப்பொழிவு பதிவானது.

சனிக்கிழமை (04) தொடர்ந்தும் Nova Scotia மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

முதற்குடியின குழந்தைகளுக்கான இழப்பீட்டை ஈடுகட்ட 40 பில்லியன் டொலர் நிதியை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது

Lankathas Pathmanathan

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

Lankathas Pathmanathan

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment