தேசியம்
செய்திகள்

COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியது!!

கனடாவில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 9 இலட்சத்தை தாண்டியுள்ளது

அதேவேளை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் இன்றுடன் 8 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கனடாவில் இன்று மாத்திரம் மொத்தம் 3,482 புதிய தொற்றுக்கள் பதிவாகின.

இவற்றில் 1,371 தொற்றுக்கள் இன்று Ontarioவில் பதிவாகின

இதன் மூலம் இன்றுடன் Ontarioவில் தொடர்ந்தும் ஆறாவது தினமாக, நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன

அத்துடன் இன்று Ontarioவில் 18 மரணங்களும் அறிவிக்கப்பட்டன தவிரவும் Quebecகில் 753, British Columbiaவில் 648, Albertaவில் 425, Saskatchewanனில் 176, Manitobaவில் 104, New Brunswickகில் 3, Nova Scotiaவில் 1, Newfoundland and Labradorரில் 1 என இன்றைய தொற்றுக்கள் பதிவாகின.

அத்துடன் Quebecகில் 9, Saskatchewanனில் 3, Albertaவில் 2, Manitobaவில் 1, New Brunswickகில் 1, என இன்று மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

இவற்றின் மூலம் இன்றுடன் கனடாவில் 9 இலட்சத்து 3 ஆயிரத்து 233 தொற்றுகளும், 22 ஆயிரத்து 404 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன் 8 இலட்சத்து 50 ஆயிரத்து 48 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Lankathas Pathmanathan

முதியவர்களை குறிவைக்கும் பண மோசடியில் தமிழர் கைது

Leave a Comment