தேசியம்
செய்திகள்

மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Ontario மாகாணம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது

Lambton பொது சுகாதாரப் பகுதி திங்கட்கிழமை முதல் முழுமையாகப் பூட்டப்பட்டிருக்கும் என இன்று முதல்வர் Doug Ford அறிவித்தார்.

Northwestern சுகாதார பிரிவு Ontario மாகாணத்தின் சிவப்பு மண்டலத்திற்குள் நகரவுள்ளது.அதேவேளை சாம்பல் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் திருமணங்கள் உட்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதுடன் ,தற்போது பூட்டப்பட்டிருக்கும் பகுதிகளில் அடுத்த வாரம் முதல் 50 பேர் வரை வெளிப்புற திருமணங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் இன்று Ontario அரசாங்கம் அறிவித்தது.

சாம்பல் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் March மாதம் 15ஆம் திகதி முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், மத நிகழ்வுகள் , சடங்குகள் அல்லது விழாக்களில் – நிகழ்வு நடைபெறும் மண்டபத்தின் 15 சதவீத கொள் திறம் வரை அனுமதிக்கப்படும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் Greater Toronto பகுதியில் உள்ள எந்தவொரு பொது சுகாதார பிரிவுகளிலும் எந்த மாற்றங்களும் இன்று அறிவிக்கப்படவில்லை

இந்த நிலையில் Bramptonனில் உள்ள முக்கிய Amazon பூர்த்தி மையம் ஒன்றை இன்று நள்ளிரவு முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த மையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த Peel பொது சுகாதார பிரிவினால் உத்தரவிடப்பட்டுள்ளது,

COVID பரவல் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அங்கு பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் சுய தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

Air Canada விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற பயணி

Lankathas Pathmanathan

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan

Leave a Comment