தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகள்

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனடாவின் பல்வேறு பகுதிகளில் இம்முறை நிகழ்வுகள் நடைபெற்றன.

Brampton நகர Chinguacousy பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு முன்னிலையில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற நிகழ்வில் காலை முதல் மாலை வரை பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Scarborough நகர Albert Campbell சதுக்கத்தில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பல மட்டத்திலான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அங்கு உரையாற்றிய நகர முதல்வர் Olivia Chow, Toronto நகரில் விரைவில் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Albert Campbell சதுக்க நினைவு நிகழ்வில்

Ottawa , Montreal , Vancouver நகரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள், மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Vancouver நிகழ்வில்

கடந்த வாரம் கனடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழின படுகொலை நினைவு தின நிகழ்வில் பல அமைச்சர்களும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழின படுகொலை நினைவு தின நிகழ்வில்

இந்த வாரம் Toronto நகரசபையில் நினைவு நிகழ்வு ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Ontario மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் 12-ஆம் திகதி ஆரம்பித்து 18 வரை அனுசரிக்கப்பட்டது.

கனடாவில் பல்வேறு மட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு இம்முறை அறிக்கைகளை  வெளியிட்டனர்.

அதில் இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதிக்காக முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney தனது அறிக்கையில் உறுதியளித்தார்.

பிரதமரின் அறிக்கை (தமிழில்)

Related posts

பிரதமரின் முதன்மை செயலரை மேலவைக்கு நியமித்தது தவறானதா?

Lankathas Pathmanathan

Fiona பேரழிவின் சேதங்களை பார்வையிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment