November 21, 2026
தேசியம்
செய்திகள்

செய்தியாளர்களைச் சந்திக்காமல் வெளியேறிய Pierre Poilievre?

உட்கட்சிப் பூசல் மத்தியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல்  நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre வெளியேறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பதற்காக British Columbia-வில் Conservative கட்சி நாடாளுமன்றக் குழு திரண்டிருந்த மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (17) நிறைவடைந்தது.

கட்சியின் நாடாளுமன்றக் குழு தங்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்துள்ள வேளையில், கட்சியின் எதிர்கால வழிகாட்டுதல், உட்கட்சிப் பிளவுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் Pierre Poilievre வெளியேறினார்.

Conservative கட்சியின் நாடாளுமன்றக் குழு முற்றிலும் உடைந்து சிதறிய ஒரு குழப்பமாக மாறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்லாமல் அங்கிருந்து Pierre Poilievre வெளியேறினார்.

Related posts

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan

பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய பன்னாட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கையில் கனடியர்களும் அடக்கம்?

Lankathas Pathmanathan

Albertaவில் இதுவரை இல்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment