Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.
Scarborough North தொகுதியில் நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான பிரவீனா சத்தியானந்தம் போட்டியிடுகிறார்.
Scarborough North தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அவர் வியாழக்கிழமை (20) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பிரவீனா சத்தியானந்தம் Scarborough-Rouge River தொகுதியில், January 2016-இல் நடைபெற்ற Toronto கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார்.
Shaun Chen வகித்து வந்த கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 20 வேட்பாளர்கள் கொண்ட பெரிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.
நீதன் சான் வெற்றி பெற்ற இந்தத் தேர்தலில், போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவராக பிரவீனா சத்தியானந்தம் 121 வாக்குகளைப் பெற்றார்.
அவர் இம்முறை நகரசபை உறுப்பினராக போட்டியிடும் Scarborough North தொகுதியின் நகரசபை உறுப்பினராக Jamaal Myers உள்ளார்.
அவர் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வியாழன் காலை வரை இந்தத் தொகுதியில் மொத்தம் ஏழு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் ஒரே ஒரு தமிழ் வேட்பாளராக பிரவீனா சத்தியானந்தம் உள்ளார்.
தவிரவும் தற்போதைய நகரசபை உறுப்பினர் Jamaal Myers, முன்னாள் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong ஆகியோர் அடங்குகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Shaun Chen இந்தத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் வெளியிட்டுள்ளார்.
இம்முறை தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைகிறது.
Ontario மாகாணத்தில் Toronto உட்பட பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களிப்பு காலம் October 6 முதல் October 11 வரையாகும்.
