தேசியம்
செய்திகள்

Toronto-வில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை

Toronto-வில் புதன் இரவு 40mm வரை மழை பெய்யக்கூடும் எனவும் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Toronto-வில் புதன்கிழமை (17) இரவு முதல் வியாழக்கிழமை (18) காலை வரை 40mm வரை மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

எதிர்வு கூறப்படும் வலுவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக, வானிலை ஆய்வு மையம் Toronto பெரும்பாகம் முழுவதையும் சிறப்பு வானிலை எச்சரிக்கையின் கீழ் வைத்துள்ளது,

புதன் மாலை முதல் இரவு முழுவதும் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

இரவு சுமார் 11 மணி வரை இந்த புயல் தீவிரமடைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மழை ஆரம்பத்தவுடன், அதிகாலை 3 அல்லது 4 மணி வரை தொடர்ச்சியான கனமழை பெய்யும் எனவும், அதன் தொடர்ச்சி வியாழன்  காலை சுமார் 8 மணி வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Toronto மைதானத்தில் புதன் மாலை 7 மணிக்கு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை ஆட்டம் முடியும் வரை மழை தீவிரமடையாது எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் 43,000 ரசிகர்கள் ஆங்காங்கே பெய்யக் கூடிய மழைக்கு தயாராக வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

Related posts

நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு!

Lankathas Pathmanathan

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் March மாதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment