தேசியம்
செய்திகள்

Scarborough Southwest தொகுதி Ontario Liberal வேட்பாளர் தெரிவு

Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith சனிக்கிழமை (09) நடந்த மாகாண வேட்பாளர் தேர்வில் தோல்வியடைந்தார்.

Scarborough Southwest தொகுதியில் உள்ள Ontario Liberal கட்சி உறுப்பினர்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்காக தமது வேட்பாளரை தேர்ந்தெடுத்தனர்.

தொழிலதிபர் Ahsanul Hafiz இந்த நியமனத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

Qadira Jackson, Ahsanul Hafiz, Mahmuda Nasrin, Nate Erskine-Smith ஆகியோர் இந்த வேட்பாளர் நியமனத் தேர்தலில்  போட்டியிட்டனர்.

இந்த வேட்பாளர் தெரிவு, Ontario Liberal கட்சியின் எதிர்காலத்தை பெரிதாகி பாதிக்கக்கூடிய தெரிவாகி நோக்கப்பட்டது.

தற்போது Beaches-East York தொகுதியின் பிரதிநிதியாக இருக்கும் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith, Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்னதாக, சட்டமன்றத்தில் ஒரு இடத்தைப் பெறுவதற்காக மாகாண Scarborough Southwest  இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தோல்வியை அடுத்து Ontario Liberal கட்சி தலைமைப் பதவிக்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க எண்ணியுள்ளாரா என்பதை Nate Erskine-Smith தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் Ahsanul Hafiz பெற்ற வெற்றியின் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூற்றை அவர் எழுப்பி வருகிறார்.

பதிவான 1,400-க்கும் மேற்பட்ட வாக்குகளில்,தான் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக Nate Erskine-Smith தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாணசபை த் தேர்தலில் Scarborough Southwest  தொகுதியில் Liberal கட்சி சார்பில் Qadira Jackson போட்டியிட்டிருந்தார்.

இந்தத் தேர்தலில் Liberal கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
எவரும் எதிர்பாராத திடீர் கட்சித் தாவலால் Scarborough Southwest இடைத்தேர்தல் தூண்டப்படுகிறது.

இந்தத் தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Ontario NDP முன்னாள் துணைத் தலைவர் Doly Begum அதிர்ச்சியூட்டும் வகையில் விலகிய நிலையில் இந்தத் தொகுதி வெற்றிடம் ஆகியுள்ளது.

தனது பதவியில் இருந்து விலகிய Doly Begum மத்திய Liberal கட்சியின் வேட்பாளராக இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் Scarborough Southwest தொகுதிக்கான இடைத்தேர்தல் திகதியை முதல்வர் Doug Ford இதுவரை அறிவிக்கவில்லை.

Scarborough Southwest தொகுதியில் இடைத் தேர்தலை அறிவிக்க அவருக்கு August மாதம் வரை கால அவகாசம் உள்ளது.

இங்கு இதுவரை Progressive Conservative கட்சிக்கு வேட்பாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை.

NDP கட்சி வேட்பாளராக Fatima Shaban தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

தொடர்புபட்ட செய்தி

Ontario Liberal கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வேட்பாளர் தெரிவு?

Related posts

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Lankathas Pathmanathan

Leave a Comment