தேசியம்
செய்திகள்

நாடு திரும்பும் Hanta தொற்றால் பாதிக்கப்பட்ட கனடியர்கள்

Hantavirus பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் சிக்கியிருந்த கனடியர்கள் நாடு திரும்புகின்றனர்.

கடந்த மாதம் MV Hondius என்ற உல்லாசக் கப்பலில் hantavirus தொற்று பரவியது.

இந்த கப்பலில் இருந்த நான்கு கனடியர்கள் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (10) நாடு  திரும்புகின்றனர்.

இந்த பயணிகள் அனைவருக்கும் தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று கப்பலிலிருந்து இறங்கிய கனடியர்கள் தமது கனடிய பயணித்திற்கான விமானத்தில் ஏறும் போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர்.

கப்பலில் இருந்த நான்கு கனடியப் பயணிகளை அழைத்து வருவதற்காக, கனடிய அரசாங்கம் Spain நாட்டின் Tenerife தீவுக்கு ஒரு விமானத்தை அனுப்பியது.

இந்த விமானம் Quebec மாகாணத்தின் Saguenay-Bagotville விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.

Saguenay-Bagotville விமான நிலையம் Quebec நகரத்திலிருந்து சுமார் இரண்டு மணி நேரத் தொலைவில் உள்ளது.

அங்கிருந்து இவர்கள் British Colombia மாகாணத்திற்கு செல்வார்கள் என தெரியவருகிறது.

இவர்களின் வருகையை மாகாண தலைமை வைத்தியர் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் 42 நாட்கள் வரை தொடரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நால்வருக்கும் நோயின் அறிகுறிகள் இல்லை என தெரிவித்த மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry , அவர்கள் கனடாவை வந்தடையும் நாளிலும் அல்லது தனிமைப்படுத்தப்படும் காலத்திலும் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்க மாட்டார்கள் என உறுதிப்படுத்தினார்.

10 கனடியர்கள் புதிய hanta தொற்றுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் சந்தேகிக்கிறது.

இவர்களில் ஆறு பேர் கனடாவிலும், சொகுசுக் கப்பலில் நான்கு பெரும் உள்ளதாக அடையாளம் காணப்பட்டனர்.

மூன்று பேர் Ontario, Quebec மாகாணங்களில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், Alberta-வில் இருவர், Ontario-வில் ஒருவர் என கூடுதலாக மூன்று கனடியர்கள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளால் பொது சுகாதார விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் rodents எனப்படும் கொறித்துண்ணிகளிடமிருந்து விலகி இருங்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Joss Reimer எச்சரித்துள்ளார்.

Hantavirus கொறித்துண்ணிகளை தாக்கும் ஒரு வகை தொற்று எனவும், அவை சில சமயங்களில் மனிதர்களுக்கும் பரவக்கூடும் எனவும் Dr. Joss Reimer கூறினார்.

Hanta தொற்றால் மூன்று மரணங்கள் உட்பட எட்டு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

MV Hondius கப்பல் புறப்பட்ட Argentina,-வில் பரவலாகக் காணப்படும் Hanta தொற்றுக்கு தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ இல்லை.

இதனால உலகளாவிய பொது சுகாதாரத்திற்கான ஆபத்து குறைவு என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியதோடு, COVID-19 பெருந்தொற்று மீண்டும் ஏற்படுவது குறித்த ஒப்பீடுகளையும் அவர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி

Hantavirus பரவல் ஆபத்து கனடாவில் குறைவு: தலைமை பொது சுகாதார அதிகாரி

Related posts

அமெரிக்காவை வெற்றி கொண்ட கனடா

Lankathas Pathmanathan

70 மில்லியன் டொலர் Lotto Max அதிஸ்டலாப சீட்டு Quebecகில் விற்பனை

Lankathas Pathmanathan

இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்

Gaya Raja

Leave a Comment