New York LaGuardia விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அமெரிக்காவின் New York LaGuardia விமான நிலைய ஓடுபாதையில் Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதில் இருவர் பலியாகினர்.
ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

72 பயணிகள், நான்கு பணியாளர்களுடன் சென்ற Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.
இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் – 41 பேர் காயமடைந்தனர்.
பலியான விமானிகள்Antoine Forest, Mackenzie Gunthere என அடையாளம் காணப்பட்டனர்.
Montreal Trudeau சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடர்ந்து New York LaGuardia விமான நிலையத்தில் தரையிறங்கிய போது AC8646 விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.
தொடர்புபட்ட செய்தி
New York LaGuardia விமான நிலையத்தில் Air கனடா விமானம் விபத்து இருவர் பலி – 41 பேர் காயம்
