September 9, 2026
தேசியம்
செய்திகள்

நெடுந்தெரு 401 விபத்தில் சிக்கிய 50 வாகனங்கள்?

நெடுந்தெரு 401-இல் 50 வாகனங்கள் வரை மோதிய விபத்து ஒன்று நிகழ்ந்தது.

கிழக்கு Ontario-வில் உள்ள நெடுஞ்சாலை 401-இல் செவ்வாய்க்கிழமை (27) 50 வாகனங்கள் மோதியதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

Quinte West, Napanee இடையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கிழக்கு Ontario-வில் திங்கட்கிழமை 100-க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நிகழ்ந்த ஒரு நாளின் பின்னர் இந்த விபத்துகள் நிகழ்ந்ததாக OPP தெரிவித்துள்ளது.

இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த விபத்து நிகழ்ந்த நெடுஞ்சாலையில் பனி மூடிய பாதைகள் உள்ளதாக போக்குவரத்து அமைச்சு (MTO) தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின்போது குறிப்பிட்ட பகுதியில் பனிப்புயல் எச்சரிக்கை அமுலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

 

 

Related posts

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Lankathas Pathmanathan

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்: இடைக்கால தலைவர் Bergen

Lankathas Pathmanathan

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment