தேசியம்
செய்திகள்

2075-ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 57 மில்லியனைத் தாண்டும்?

கனடாவின் மக்கள் தொகை 2075-ஆம் ஆண்டுக்குள் 57 மில்லியனைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது.

புதிய மக்கள் தொகை கணிப்புகளை கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டுள்ளது.

இதில் அடுத்த அரை நூற்றாண்டில் வேகமாக மாறிவரும் கனடாவின் மக்கள் தொகை குறித்த எதிர்வுகூறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2025 முதல் 2075 வரையிலான கால கட்டத்தை உள்ளடக்கியதாக  சமீபத்திய கருத்துக் கணிப்புகள் அமைந்துள்ளன.

2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 41.7 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள கனடாவின் மக்கள் தொகை, அனைத்து சூழ்நிலைகளிலும் தொடர்ந்து அதிகரிக்கும் என புதிய கணிப்பு பரிந்துரைக்கிறது.

நடுத்தர வளர்ச்சி அடிப்படையில், மொத்த மக்கள் தொகை 2075-இல் 57.4 மில்லியனை எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது.

ஒரு உயர் வளர்ச்சிப் பாதையில், அதே ஆண்டு மக்கள் தொகை 75.8 மில்லியனாக உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

குறைந்த வளர்ச்சி கண்ணோட்டத்தில், கனடாவின் மக்கள் தொகை 2075-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 44 மில்லியனாக அதிகரிக்கும் என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் 2026 தேசிய மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan

சட்டமாக நிறைவேற்றப்பட்ட Canada Dental Benefit

Lankathas Pathmanathan

Leave a Comment