தேசியம்
செய்திகள்

Ottawa காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் படுகாயம்

Ottawa  காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்

Ottawaவின் Westboro பகுதியில் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் காவல்துறை அதிகாரியால் சுடப்பட்டதில் ஒரு பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Ontarioவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Investigations Unit  – SIU ) விசாரித்து வருகிறது.

இந்த துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சம்பவம் மதியம் 1:30 மணி அளவில் ஆரம்பித்ததாக SIU கூறுகிறது.

வாகனம் ஒன்றை காவல்துறையினர் நிறுத்திய போது 25 வயதான பெண் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடினார் என SIU தெரிவித்துள்ளது.

இவரைப் பின் தொடர்ந்த காவல்துறை அதிகாரி அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அந்த பெண் காயமடைந்தார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் ஆபத்தான நிலையில் உள்ளார் என SIU கூறுகிறது.

இந்த சம்பவம் குறித்து SIU வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதனால் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment