தேசியம்
செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றியடைந்த பிரதமர்

பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

பிரதமர் Justin Trudeauவுக்கு எதிராக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

Carbon விலை நிர்ணயம் தொடர்பான Conservative கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.

18 மாதங்களில் 11வது முறையாக Conservative தலைவர் Carbon விலைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் இதுவாகும்.

ஆனாலும் Justin Trudeauவுக்கு எதிரான முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானமாக இது அமைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நிறைவேற்றி, Carbon வரி தொடர்பாக பிரதமர் Justin Trudeauவின் Liberal சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான Pierre Poilievreரின் முயற்சி வியாழக்கிழமை (21) தோல்வியடைந்தது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, Justin Trudeau வெற்றி பெற்றார்.

ஒரு நாள் தொடர்ந்த விவாதத்தின் பின்னர் வாக்களிப்பு நடைபெற்றது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு தலைமை தாங்கிய Pierre Poilievre, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் நடைபெற்ற வாக்களிப்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து Liberal, NDP, Bloc Quebecois, பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Conservative கட்சியுடன் இணைந்து சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Kevin Vuong பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 116 வாக்குகளும், எதிராக 204 வாக்குகளும் இறுதியாக பதிவானது.

Related posts

தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

மூத்த விளையாட்டு ஊடகர் காலமானார்

Lankathas Pathmanathan

Leave a Comment