தேசியம்
செய்திகள்

Davos உரையில் முன்வைத்த கருத்துக்களை கனடிய பிரதமர் மீள பெற்றாரா?

Davos உரையில் முன்வைத்த கருத்துக்களை கனடிய பிரதமர் Mark Carney மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம் உலகப் பொருளாதார மன்றத்தில் Mark Carney  உரையாற்றினார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் இந்த உரையில் இடம் பிடித்திருந்தது.

ஆனாலும் ஒரு தொலைபேசி அழைப்பின் போது தனது கருத்துக்கள் சிலவற்றில் இருந்து Mark Carney பின்வாங்கினார் என அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (27) மறுத்தார்.

Davos உரையில் தான் முன்வைத்த கருத்துக்களை ஜனாதிபதியிடம் தொலைபேசியில் மீண்டும் தெளிவுபடுத்தியதாக செய்தியாளர்களிடம் Mark Carney கூறினார்.

Donald Trump திங்கட்கிழமை (26) தன்னை அழைத்ததை உறுதிப்படுத்திய பிரதமர், இருவரும் பல்வேறு பிரதான விடயங்கள் குறித்து உரையாடியதாகவும் கூறினார்.

திங்கள் நடைபெற்ற இரு நாட்டின் தலைவர்கள் உரையாடலின்போது Mark Carney தனது உரையின் சில பகுதிகளை திரும்பப் பெற்றதாக அமெரிக்க கருவூல செயலாளர்  Scott Bessent கூறியதைத் தொடர்ந்து கனடிய பிரதமரின்  மறுப்பு வெளியானது.

சர்வதேச பாராட்டைப் பெற்ற Davos உரையில், “பொருளாதார ஒருங்கிணைப்பை” ஆயுதங்களாக பயன்படுத்தும் பெரும் சக்திகளுக்கு எதிராக Mark Carney எச்சரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதியை நேரடியாக கண்டிக்காத போதிலும் “பழைய உலக ஒழுங்கு மீண்டும் வரப்போவதில்லை” என கூறியது பெரும் கவனத்தைப் பெற்றது.

இந்த உரைக்கு பதிலளித்த Donald Trump, “அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது” என்பதை Mark Carney நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்குப் பின்னர், கனடா “சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால்” கனடிய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக Donald Trump எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது

Related posts

ஒலிம்பிக் போட்டியில் கனடா முதலாவது தங்கம் வென்றது

Gaya Raja

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் Halifax நகரில் 21 பேர் கைது

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: Jennifer McKelvie உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment