தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு?

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு-பாலஸ்தீனிய உறுப்பினர் Rima Hassan, கனடாவிற்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

அவர் Montreal நகரில் நடைபெற இருந்த மாநாடுகளில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு வருவதிலிருந்து தான் தடுக்கப்பட்டது ஒரு தணிக்கை முயற்சி என Rima Hassan விமர்சித்தார்.

அவரது மின்னணு பயண அங்கீகாரம் முதலில் கனடிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வெள்ளிக்கிழமை ( 27) இரத்து செய்யப்பட்டதாக, தீவிர இடதுசாரி கட்சியான யான France Unbowed கட்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதி மதிப்பை “சந்தேகத்திற்குரியது” என NDP நாடாளுமன்ற உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்தார்.

Related posts

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Lankathas Pathmanathan

COVID பரிசோதனையில் Ontarioவில் விரைவில் வரவுள்ள மாற்றங்கள்

Lankathas Pathmanathan

நாட்டை வலுப்படுத்த மக்களிடம் இருந்து மிகத் தெளிவான ஆணை உள்ளது: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment