தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு $570 மில்லியன் செலவாகும்?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு 570 மில்லியன் டொலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stephane Perrault இந்தத் தகவலை வெளியிட்டார்.
பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிட்டார்.
இந்தத் தேர்தலினால் வரி செலுத்துவோருக்கு 2021 தேர்தலை விட சற்று குறைவான தொகை செலவாகும் என தலைமை தேர்தல் அதிகாரி கணித்துள்ளார்.
இந்தத் தேர்தலுக்காக சுமார் 250,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தேர்தல் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 119 பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை இந்த ஆண்டு மீண்டும் நடைமுறைப்படுத்த தேர்தல் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இது மாணவர் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீதத்தினருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது முதற்குடி சமூகங்களில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வாரம் 250 ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடா வருகை

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்!

Lankathas Pathmanathan

இலங்கை தார்மீக, பொருளாதார ரீதியாக திவாலான ஒரு நாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment