தேசியம்
செய்திகள்

போலியான COVID சோதனை முடிவுகளை வழங்கிய விமானப் பயணிகளுக்கு  17 ஆயிரம் டொலர் அபராதம்

போலியான எதிர்மறை COVID சோதனை முடிவுகளை வழங்கிய  இரண்டு விமானப் பயணிகளுக்கு  17 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விமான பயணிகளுக்கு Transport கனடா இந்த அபராத்தை விதித்துள்ளது. இவர்கள் கனடாவுக்குத் திரும்புவதற்கு முன்னர் பொய்யான COVID சோதனை முடிவுகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறான அல்லது பொய்யான சோதனை முடிவை வழங்கியதற்காகவும், தமது உடல்நிலை குறித்து தவறான தகவலை வழங்கியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பயணிகளுக்கும் முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம் டொலர்  அபராதம் விதிக்கப்பட்டதாக இன்று வெளியான ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் COVID தொற்று இருப்பதாக பரிசோதனை செய்த பின்னர், இவர்கள் இருவரும் January மாதம்  23ஆம் திகதி  அன்று Mexicoவிலிருந்து Montrealலுக்கு பயணித்ததாக Tranport  கனடா தெரிவித்துள்ளது.

தற்போதைய கனடிய விதிமுறைகளின் படி, கனடாவுக்கு வரும் பயணிகள் தமது பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர்  எதிர்மறையான COVID சோதனை முடிவை சமர்ப்பிக்க  வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

ஒரு மாதம் தொடரவுள்ள கனடாவின் எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!