தேசியம்
செய்திகள்

பூட்டுதல் நடவடிக்கை அடுத்த மாதம் 9ஆம் திகதி  வரை நீட்டிக்கப்படுமா? – வெள்ளி முடிவு அறிவிக்கப்படும்

Ontarioவில் COVID தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்த அறிவித்தல் நாளை (வெள்ளி) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி David Williams புதிய தொற்று பரவல் குறித்த தரவுகளை மறுஆய்வு செய்வார் என சுகாதார அமைச்சர் Christine Elliott இன்று (வியாழன்) அறிவித்தார். அதன் பின்னர் அவர் தனது இறுதி பரிந்துரையை ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு தெரியப்படுத்துவார் எனவும் அமைச்சர் Elliott கூறினார். இந்த நிலையில் Toronto, Peel பிராந்தியம், York பிராந்தியம், North Bay ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா என்ற முடிவு நாளை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Toronto நகரமும் Peel பிராந்தியமும்  தற்போது அமுலில் உள்ள பூட்டுதல் நடவடிக்கையை குறைந்தது அடுத்த மாதம் 9ஆம் திகதி  வரை நீட்டிக்க மாகாண அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பரிந்துரையை தனது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் Doug Ford இன்று தெரிவித்திருந்தார்.

Related posts

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலி

Lankathas Pathmanathan

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

Lankathas Pathmanathan

Leave a Comment