தேசியம்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்கள் நினைவாக அமைதி நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தலைநகர் Ottawaவில் ஆறு இலங்கையர்கள் கடந்த வாரம் புதன்கிழமை (06) படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் பலியானவர்கள் 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா, 7 வயதான இனுக்கா விக்கிரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான றினாயனா விக்கிரமசிங்க, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்க, 40 வயதான ஜீ காமினி அமரகோன் என அறிவிக்கப்பட்டது.

இவர்களில்  ஜீ காமினி அமரகோனின் உடல் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குடும்பத்தினர் கோரிக்கை அமைவாக அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கைத் துணை உயர் ஆணையர் அன்சுல்  ஜான் தேசியத்திடம் தெரிவித்தார்.

பலியான ஏனையவர்களின் இறுதி கிரியைகள் கனடாவில் நடைபெறும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயது Febrio De-Zoysa கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக 6 முதல் நிலை கொலை, ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Febrio De-Zoysa வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் எதிர்கொண்டார்.

சந்தேக நபர் வியாழக்கிழமை (14) மீண்டும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

அவர் இலங்கைப் பிரஜை எனவும், அவர் ஒரு மாணவராக கனடாவில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களின் இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள Palmadeo பூங்காவில் கடந்த சனிக்கிழமை (09) விழிப்புணர்வு அமைதி நிகழ்வு நடத்தப்பட்டது.

Related posts

பாடசாலைக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்ட இளைஞர் கைது

Lankathas Pathmanathan

AstraZeneca பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசி: அமைச்சர் அனிதா ஆனந்த்!

Gaya Raja

Markham நகரிலும் தமிழின நினைவுத்தூபி அமைக்கத் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment