தேசியம்
செய்திகள்

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Ottawaவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் Ottawa புறநகர் பகுதியில் 6 பேரை கொன்ற குற்றத்தில் 19 வயதான Febrio De-Zoysa கைதானார் .

இவர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் Ewan Lyttle கூறினார்

கைதிகள் ஏனைய கைதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக பெரும்பாலும் பாதுகாப்புக் காவலில் வைக்கப்படுவது வழமையாகும்.

Febrio De-Zoysa மீது 6 முதல்தர கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக அவர்  நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் மீண்டும் March 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

இந்த கொலைகளுக்கான காரணத்தை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தி வைக்கும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் வரிகளை தவிர்க்க கனடாவுக்கு வழியுண்டு?

Lankathas Pathmanathan

ஈரான் அல்லது Venezuela-வில் தூதரகம் எதையும் திறக்கும் எண்ணம் கனடாவுக்கு இல்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment