தேசியம்
செய்திகள்

Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை விலக்கியுள்ளனர்!

Conservative கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை Pierre Poilievreக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

Hamilton நாடாளுமன்ற உறுப்பினர் Dan Muys, Dufferin-Caledon நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் செவ்வாய்கிழமை இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் Brownனின் வேட்புமனுவை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாக குறைவடைந்துள்ளது.

Poilievreக்கு 56 நாடாளுமன்ற உறுப்பினர்களும் Jean Charestக் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Poilievreரின் பிரச்சார குழு 312,000 கட்சி உறுப்பினர்களையும், Brownனின் குழு 150,000 கட்சி உறுப்பினர்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 600,000 கட்சி உறுப்பினர்கள் September மாதம் நடைபெறும் தலைமைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என Conservative கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

“Walk with Israel” நடைப் பயணத்தில் ஆறு பேர் கைது

Lankathas Pathmanathan

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற கனடா அனைத்து முயற்சிகளையும் கையிலெடுக்கும்: அமைச்சர் Mendicino!

Gaya Raja

2024 Paris Olympics: வெளியேற்றப்பட்டது கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி

Lankathas Pathmanathan

Leave a Comment