தேசியம்
செய்திகள்

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Quebec மாகாணத்தில் கட்டாய முகமூடி கட்டுப்பாடுகள் May மாதத்தின் நடுப்பகுதி வரை  தொடரவுள்ளது.

முகமூடி கட்டுப்பாட்டை நீட்டிப்பதற்கான இடைக்கால பொது சுகாதார இயக்குனரின் பரிந்துரையை சுகாதார அமைச்சர் Christian Dube ஏற்றுக்கொண்டார்.

இந்த முடிவை ஒரு அறிக்கை மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

COVID தொற்றின் ஆறாவது அலையின் மத்தியில், April மாத இறுதி முதல் May மாத நடுப்பகுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகள் Quebec மாகாணத்தில் விலக்கப்பட இருந்தன.

அதேவேளை  Quebec மாகாணத்தில்   சமீபத்திய கணிப்புகளின்படி, புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quebecகில் வியாழக்கிழமை (21) தொற்றின் காரணமாக 2,381 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment