தேசியம்
செய்திகள்

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

RB எனப்படும் கனடா மீட்பு நல உதவித் திட்டத்தை மத்திய அரசாங்கம் மேலும் 12 வாரங்களுக்கு நீட்டிக்கின்றது.

இன்று (வெள்ளி)பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

தனது அரசாங்கம் CRCB  எனப்படும் கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவு திட்டத்தையும் நீடிக்கும் என பிரதமர் Trudeau இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். CRSB எனப்படும் கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவையும் விதி மாற்றங்களின் மூலம் 4 வாரங்களாக நீட்டிக்கவும்  அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

March மாத இறுதிக்குள் சில பெறுநர்கள் இந்த உதவித்  திட்டங்களை இழக்கவுள்ள நிலையில் இன்று இந்த அறிவித்தல் வெளியானது. COVID தொற்றின்  நெருக்கடி முடிந்துவிடவில்லை எனக் கூறிய பிரதமர்,  இந்த நிலையில்  அனைவருக்குமான அரசாங்கத்தின் உதவியும் முடிவடையாது எனத் தெரிவித்தார்

அதேவேளை EI எனப்படும் வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவு  வழங்கப்படும் வாரங்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கப்படவுள்ளது.

CRB, CRCB ஆகியன கிடைக்கும் ஆகக் கூடிய காலத்தை விதிமாற்றங்களின் மூலம் 12 வாரங்களால் அதிகரிப்பதால், அது 26 வாரங்களில் இருந்து 38 வாரங்கள் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது 2 வாரங்கள் வழங்கப்படும் CRSB, விதி மாற்றங்களின் மூலம் 4 வாரங்களாக நீடிக்கப்படவுள்ளது.

அதேவேளை 2020ஆம் ஆண்டு September 27ஆந் திகதிக்கும், 2021ஆம் ஆண்டு September 5ஆந் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் வழமையான EI கொடுப்பனவு , சட்டத் திருத்தம் மூலம் 24 வாரங்கள் வரையான காலப்பகுதியால் ஆகக் கூடியது 50 வாரங்கள் வரை நீடிக்கப்படவுள்ளது

இதற்கான நெறிப்படுத்தல் ஏற்பாடுகளையும், சட்டத் திருத்தங்களையும் முன்வைக்கக் கனடிய அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பாடசாலைகளில் நேரடி கல்வி ஆரம்பிப்பதை தாமதப்படுத்தும் மாகாணங்கள்

Lankathas Pathmanathan

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

மூன்று வாரங்களில் Ontarioவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கலாம்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!