தேசியம்
செய்திகள்

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

Conservative கட்சி கடந்த வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்று (திங்கள்) இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்த நிலையில்கனடிய மத்திய அரசும் இதே நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கோரினர். பிரதமர் Justin Trudeau இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதேபோல் அவரது அமைச்சரவையும் இந்த வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவு அமைச்சர் Marc Garneau நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போதிலும் வாக்கெடுப்பை தவிர்த்தார். கனடிய அரசாங்கத்தின் சார்பில் தான் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பதாக Garneau தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தினார்.

வாக்களிப்பில் பங்கேற்ற அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பாலான Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Related posts

சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவதை கனடா பரிசீலிக்கலாம்: பிரதமர்

Gaya Raja

ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கனடா மறுபரிசீலனை

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை அறிமுகமாகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!