தேசியம்
செய்திகள்

கனடா இந்த வாரம் 6 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்

கனடா இந்த வாரம் 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID  தடுப்பூசிகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்தத் தடுப்பூசிகளை கனடா இந்த வாரம் பெறவுள்ளது. இது கனடா ஒரு வாரத்தில் பெறும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளாக அமையவுள்ளது.

தொடர்ந்து அடுத்த வாரங்களில் கனடா வாராந்தம் 4 இலட்சத்தி 45 ஆயிரம் தடுப்பூசிகளை இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து பெறவுள்ளன. கடந்த வாரம் Pfizer 4 இலட்சம் தடுப்பூசிகளை கனடா Pfizer நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja

பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம்: Bloc Québécois தலைவர்

Gaya Raja

கனடாவின் Olympic புறக்கணிப்பு ஒரு கேலிக்கூத்து: சீனா விமர்சனம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!