தேசியம்
செய்திகள்

அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் திகதியை நிர்ணயிக்கும் எண்ணம் இல்லை: கனடிய மத்திய அரசு தகவல்

பெருமளவிலான தடுப்பூசிகளை கனடியர்களுக்கு வழங்குவது மாத்திரம் கனடாவை மீண்டும் வழமைக்கு திரும்ப வைக்கும் காலவரிசைக்கான காரணியல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (செவ்வாய்) இந்தத் தகவலை வெளியிட்டார். கனடாவை மீண்டும் வழமைக்கு திரும்ப வைக்கக் திறக்கும் காலவரிசைகள் பல்வேறு காரணிகளை பின்னணியாக கொண்டுள்ளன என அவர் கூறினார். தொற்றின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்படுபவர்களின் எண்ணிக்கை, இறப்பு உள்ளிட்ட தீவிர விளைவுகளின் விகிதங்களுடன், சோதனை, தடமறிதல் ஆகியவற்றுக்கான பொது சுகாதாரத் திறனையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்படும் எனவும் வைத்தியர் Tam தெரிவித்தார்.

இந்த நிலையில் தொற்று தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் உத்தியோகபூர்வ திகதியை நிர்ணயிக்கும் எண்ணம் இல்லை என கனடிய மத்திய அரசு கூறுகின்றது.மேலும் இந்த முடிவு பொது சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் அமையும் என அரச விவகார அமைச்சர் Dominic LeBlanc இன்று தெரிவித்தார்.

Related posts

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும்

Lankathas Pathmanathan

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment