தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் மருத்துவமனைகளில் மீண்டும் அதிகரிப்பை எதிர்கொள்ளும் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை

கனடா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பை எதிர்கொள்கிறது.

இந்த நிலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை April 4 ஆம் திகதிக்கும் April 11 ஆம் திகதிக்கும்  இடையில் கனடா முழுவதும் சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த கால கட்டத்தில் 5,109தில் இருந்து  6,020 ஆக அதிகரித்தது.

கடந்த வாரத்தில்,  Quebec, Ontario, Nova Scotia, Prairies மாகாணங்கள் அனைத்தும் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சில மாகாணங்களில் அதிகரித்துள்ளன.

Related posts

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja

வணிக வாகன திருட்டு விசாரணையில் 15 பேர் கைது

Lankathas Pathmanathan

Ottawa தொகுதியில் போட்டியிடும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment