தேசியம்
செய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என   அரசாங்கத்திடம்   Conservative, NDP ஆகிய எதிர்க்கட்சிகள் கோருகின்றனர்.

கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதை நிவர்த்தி செய்ய பணவீக்க நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு அணுகுமுறைகளுடன் புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

கனேடியர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் வசூலிக்கப்படும் GST வரியை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என Conservative கட்சி ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

இந்த பிரேரணை NDP, Bloc Quebecois ஆகிய கட்சியின் ஆதரவை பெறும் என நம்புவதாக Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen கூறினார்.

பெரிய நிறுவனங்களின் மீது அதிகப்படியான வரியை விதிப்பதன் மூலம்  உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளை நிவர்த்தி செய்ய முடியும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

Related posts

வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ள கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!