தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Trudeau மீது சரளைக் கல் வீச்சு – ஒருவர் காவல்துறையினரால் கைது

தேர்தல் பிரச்சாரத்தில் Justin Trudeau மீது சரளைக் கல் வீசப்பட்ட சம்பவத்தில் St. Thomas Ontarioவை சேர்ந்த ஒருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை London Ontarioவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த Liberal கட்சி தலைவர் மீது சரளைக் கற்கள் வீசப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இந்த கற்கள் Trudeauவை மட்டுமல்லாது, அவருக்கு பாதுகாப்பு வழங்கிய RCMP உறுப்பினர்கள் சிலர், பிரச்சாரத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலரையும் தாக்கியது.

சனிக்கிழமை, 25 வயதான Shane Marshall மீது ஆயுதத்தால் தாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு பதிவானதாக காவல்துறையினர் அறிவித்தனர்.

Marshall கைது செய்யப்பட்டு சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது அடுத்த நீதிமன்ற விசாரணை October மாதம் 6ஆம் திகதியாகும்.

Elgin Middlesex London தொகுதியின் கனடாவின் மக்கள் கட்சியின் தலைவர் Marshall இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

Related posts

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja

பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் விவாதம்

Lankathas Pathmanathan

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment