தேசியம்
செய்திகள்

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் வீழ்ச்சி!

நாடளாவிய ரீதியில் புதிய COVID தொற்றுகளின் எண்ணிக்கை வாரந்தோறும் வீழ்ச்சியடைகின்றது.

திங்கட்கிழமை கனடாவில் 612 தொற்றுக்கள் மாத்திரம் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது.

Ontario திங்கட்கிழமை 270 தொற்றுக்களை பதிவு செய்தது. இது ஒன்பது மாதங்களுக்கும் மேலான காலத்தில் ஒரே நாளில் பதிவான மிகக் குறைவான தொற்றுகளின் எண்ணிக்கையாகும். தொற்றுகளின் குறைந்த எண்ணிக்கைக்கு காரணமாக தடுப்பூசிகளின் தாக்கம் உள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams கூறினார்.

Ontarioவில் திங்கட்கிழமை காலை வரை 12.8 million பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 3 million பேர் Ontarioவில்  இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

Ontaria தவிர ஏனைய  மாகாணங்கள் அனைத்திலும் திங்கட்கிழமை தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின. குறிப்பாக Quebec மாகாணத்தில் கடந்த August மாதத்திற்கு பின்னர் திங்கட்கிழமை 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment