தேசியம்
செய்திகள்

ஆப்கானியர்கள் தொடர்ந்து கனடாவுக்கு வரவேற்கப்படுவார்கள் : பிரதமர் Trudeau

ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவத்தினருக்கு உதவிய ஆப்கானியர்களை அழைத்து வந்த முதலாவது விமானம் கனடாவை வந்தடைந்தது.

இந்த விமானத்தை குடிவரவு அமைச்சர் Marco Mendicino நேரடியாக சென்று வரவேற்றார்.

புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்த முதலாவது விமானத்தில் எத்தனை ஆப்கானியர்கள் அகதிகளாக கனடாவை வந்தடைந்தார்கள் என்ற தகவலை கனேடிய மத்திய அரசு வெளியிடவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக கனடாவை வந்தடைந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்த விவரங்களை வெளியிடப் போவதில்லை என அமைச்சர் Mendicino வியாழக்கிழமை கூறினார்

ஆனாலும் வரும் நாட்களிலும் வாரங்களிலும் மேலும் இதுபோன்ற விமானங்கள் கனடாவை வந்தடையும் என அரசாங்கத்தின் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தை வியாழக்கிழமை மாலை பல குழந்தைகள், முதியவர்கள் உட்பட 35ற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகள் வந்தடைந்தனர் என தெரியவருகின்றது.

தலிபான்களினால் ஆபத்தை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தானின் தூதரக தொழிலாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அவர்களது குடும்பங்களை தனது அரசாங்கம் தொடர்ந்து கனடாவுக்கு வரவேற்கும் என பிரதமர் Justin Trudeau கூறினார் .

அகதிகள் ஒவ்வொருவரும் கனடாவுக்குள் நுழைவதற்குத் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் COVID தொற்று பரிசோதிக்கப்பட்டனர் எனவும் கனடாவின் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: அமைச்சர் Joly

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!