தேசியம்
செய்திகள்

நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம்!

COVID தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம் என கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

அதிக அளவில் பரவும் Delta மாறுபாட்டால் தூண்டப்படும் நான்காவது அலை குறித்த அச்சம் உள்ளபோதிலும், பொதுத் தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மையில் சில மாகாணசபைத் தேர்தல்களில் செய்யப்பட்டதைப் போல, தனிப்பட்ட முறையில் வாக்களிக்கும் அபாயத்தைக் குறைக்க பாதுகாப்பு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தலாம் என அவர் கூறினார்.

கனடாவின் அதிகரித்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதம், கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது எனவும் Tam தெரிவித்தார்.

இவற்றைத் தாண்டியும் நேரடியாக சென்று வாக்களிப்பது ஆபத்தானது என நினைக்கும் எவரும் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் எனவும் வைத்தியர் Tam குறிப்பிடுகிறார்.

பிரதமர் Justin Trudeau இந்த மாதம் தேர்தலுக்கான அழைப்பை விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல், September மாதம் நடுப்பகுதி முதல் பிற்பகுதிக்கும் நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

கனடாவில் திருடப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல்

Lankathas Pathmanathan

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment