Manitobaவில் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது.
Manitobaவின் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வியாழக்கிழமை வெளியானது.
அடுத்த மாதம் முதல் மீண்டும் பாடசாலைகளில் நேரடிக் கல்வி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Kindergarten முதல் 12ஆம் ஆண்டுவரை மாணவர்களுக்கு பாடசாலை நேரடி கல்விக்கு திறக்கப்படும் என Manitoba மாகாணம் தனது அறிவித்தலில் தெரிவித்தது.
மீண்டும் பாடசாலைகளைத் திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை எனக் கூறப்பட்டாலும் முகக்கவசம் கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.